நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

லைபீரியா, ஹொங்கொங், பஹ்ரைன், இந்தியா ஒமான் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கே இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 198 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.