சஜித்தை நோக்கி கல்வீச்சு தாக்குதல்- இரத்மலானையில் சம்பவம்

மக்களின் ஆணை கிடைத்ததன் பின்னர் அதிகாரத்தை பெற்றுக்கொண்டு மக்களுக்கு நன்றி செலுத்தும் யுகமொன்று உருவாக்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இரத்மலானை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்தி்பபில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருந்த போது அங்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சஜித் பிரேமதாச உரையாற்றிக்கொண்டிருக்கும்போது அவரை நோக்கி இனந்தொரியாத சிலர் கற்களை வீசியுள்ளனர்.

இதன்போது சஜித், இந்த கல்வீச்சு தாக்குதலுக்கு எல்லாம் தான் ஒருபோதும் பயப்படமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்ததொரு சவாலையும் எந்நேரத்திலும் எதிர்க்கொள்ள தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரரணக்காக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபரின் பணிப்பரைக்கு அமைய பல காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 9 மணியளவில் குறித்த கூட்டம் ஆரம்பமான போது எதிர்க்கட்சி தலைவர் மேடையில் உரையாற்றி கொண்டிருந்த நிலையில் இந்த கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.