மாத்தறையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தொடர்பில் வெளியான விசேட தகவல்..!

மாத்தறையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தங்கியிருந்த ஹோட்டலில் முறையான சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

மாத்தறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்த சிலருக்கு பீ.சி.ஆர் பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ருஷியா நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்ததது.

அதனை தொடர்ந்து அவர் ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதணையின் போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபரிடம் மேலும் ஒரு பரிசோதணை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபருடன் தொடர்பை பேணிய 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இவர் தங்கியிருந்த ஹோட்டலின் ஊழியர்கள் 18 மற்றும் ஹோட்டல் நிர்வாகியின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.