நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

நாட்டில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இறுதியாக தொற்றுறுதியான மூவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், 186 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.