ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்கும் தினம் அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆராயவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்த சஜித் பிரேமதாஸ கட்சியிலிருந்து விலகியதன் காரணமாக அந்த பதவிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதி தலைவர் எவர் என்பதை செயற்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.