கம்பளையில் நடந்த சோக சம்பவம்.. வீட்டின்மீது மதில் இடிந்து விழ்ந்து சேதம்....


கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தில் புனர் நிர்மாணப் பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த வீடு ஒன்றின் மீது 60 அடி நீளமும் 24 அடி அகலமும் கொண்ட மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளது

வீட்டின் உரிமையாளரான நபர் பெரும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலையில் அதிலிருந்து விடுதலை பெறும் நோக்கில் கடுகஸ்தொடையில் இருந்த தனது பூர்வீக வீட்டினை 80 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து அதிலிருந்த மீதி பணத்தில் தனது மனைவியின் ஊரான கம்பளை ரத்மல் கடுவையில் மேற்படி அனர்த்தத்திற்கு உள்ளான வீட்டினை வாங்கி புனர் நிர்மாணம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கடும் மழை காரணமாக கடந்த 11 ஆம் திகதி இரவு மேற்குறிப்பிட்ட அனர்த்தம் நிகழ்ந்துள்ளது 

அனைத்தையும் இழந்து நிர்கதியாக இருக்கும் தனக்கு ஜனாதிபதி அவர்கள் கவனம் எடுத்து உதவிபுரிய வேண்டும் என அனர்த்தத்திற்கு உள்ளான வீட்டின் உரிமையாளர் வேண்டு கோள்விடுக்கின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.