பிரேமலால் ஜயசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு- சற்றுமுன் வெளியான செய்தி

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ப்ரேமலால் ஜெயசேகரவை நாடாமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்மை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்கி சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் நகர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மனுவின் பிரதிவாதிகளாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த மனு மீதான பரிசீலனை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் ஏ.எச்.எம்.டீ.நவாஸ் உள்ளிட்ட நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதென இதுவரையில் நீதிமன்றம் அறிவிக்கவில்லை எனவும் இதன் போது மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் விவாதத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

அரசிலமைப்பிற்கு அமைய மனுதாரருக்கு நாடாளுமன்ற உறுப்பிருக்கு கிடைக்க கூடிய சகல உரிமைகளையும் அனுபவிப்பதற்கு சட்டரீதியான தடைகள் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்வதற்கான சட்டரீதியான தடை காணப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மனுவை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த மனுவை இந்த மாதம் 29 ஆம் திகதி மீள அழைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் பிரதிவாதிகளான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, வெலிகடை சிறைச்சாலை அதிகாரி மற்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.