காணமல் போன கம்பளைப் பாலம்; பொதுமக்கள் அசௌகரியம்கம்பளை நகர சபை மற்றும் கங்கஇஹலகோரல பிரதேச சபைகளை ஊடறுத்துச் செல்லும் பிரதான பாலத்தின் ஒரு பகுதி உடைந்துள்ளமையால் இருசபைகளுக்குமான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

குறித்த பாலத்தை திருத்தியமைக்கும் வகையில் உரியவர்களிடம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டிருந்த பொழுதிலும் அவை பாராமுகமாக இருந்துவருகின்றமை குறித்து பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இவை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கம்பளை நகர சபை கங்கஹில கோரல பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களின் தொடர்பு தற்பொழுது முற்றாக துண்டிக்கப்பட்டிருப்பதினால் குறித்த பிரதேசங்களுக்கு செல்வதாயின் பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திக்குட்பட்ட கம்பளை நகர சபையையும் கங்கஹிலகோரல பிரதேச சபைக்கு உட்பட்ட கம்பலவெல பிரதேசத்தையும் இணைக்கும் கம்பலவெல பிரதான பாலத்தின் ஒரு பகுதியே இவ்வாறு உடைந்துள்ளது. இந்த பாலம் உடைந்து 06 வருடங்கள் கடந்த போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை புனரமைப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை முன்னெடுக்கவில்லை. 

இதனால் கம்பளை நகர சபைக்கும் கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கும் உட்பட்ட பிரதேசங்களின் தொடர்பு தற்பொழுது முற்றாக துண்டிக்கபட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் கம்பலவெல பிரதேச மக்கள் தங்களின் நாளாந்த தேவைகளுக்கு குறித்த பாலத்தின் ஊடாகவே கம்பளை நகரத்திற்கு வந்து செல்கின்றனர். தற்பொழுது பல கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்லும் துர்ப்பாகிய நிலை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.