மீண்டும் பாராளுமன்ற செல்கிறார் ரணில்... சூடு பிடிக்கும் அரசியல் களம்...

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 74 ஆவது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

நேற்று முற்பகல் சர்வமத வழிபாடுகளுடன் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆண்டுபூர்த்தி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வுகளில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சட்டம் ஒன்று இயற்றப்படுமானால் நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருந்து இந்த விடயம் தொடர்பில் எம்மால் எதனையும் கூறமுடியாது.

ஆனால் இந்த விடயம் தொடர்பிலான நன்மை தீமைகளை நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்கக்கூடிய சிறந்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பது எனது கருத்து எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே தேசியப் பட்டியல் உறுப்பினராக எமது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடளுமன்றம் செல்வது பொறுத்தமானதாக அமையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தான் முழுமையாக தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இளம் தலைமைத்துவம் வர வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இதனால், இந்த வாரத்தில் தீர்மானம் ஒன்றை எடுப்பார் என நான் நினைக்கின்றேன். கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க நான் நிச்சயம் தயாராக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து கருத்து வெளியிட்டுள்ள ருவான் விஜேவர்தன, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு செல்ல போவதில்லை என நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றேன்.

நாடாளுமன்றத்திற்கு செல்வதென்றால் மக்களின் வாக்குகளிலேயே செல்ல எதிர்பார்த்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.