இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பம்..!

13 ஆவது இருபதுக்கு இருபது ஓவர் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் இடம்பெறவிருந்த ஐ.பி.எல் தொடர் கொவிட் 19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.

பின்னர் இந்த தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கவிருந்த இலங்கை அணியின் வீரர் லசித் மாலிங்க, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஸ் ரெய்னா உள்ளிட்ட பிரபல வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.