பிரதமர் பதவி குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமது பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் அரசாங்க மட்டத்தில் முன்னெடுக்கப்படவில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன் இது தொடர்பாக கட்டுக்கதைகளே உலாவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதே வேளை தமக்கு இரண்டு ஆண்டுகளில் பதவியினை இராஜினாமா செய்யும் எண்ணமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

மேலும் தாம் ஐந்து வருடங்களுக்கு நாடாளுமன்றத்துக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இடைநடுவில் வௌியேறுவதற்கான எவ்வித தேவையும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.