நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி

நாட்டில் நேற்று 9 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பியிருந்த 4 பேருக்கும், குவைத்திலிருந்து நாடுதிரும்பியிருந்த 3 பேருக்கும், கட்டார் மற்றும் இந்தியாவில் இருந்து நாடுதிரும்பியிருந்த தலா ஒவ்வொருவருவரும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 271 ஆக உயர்வடைந்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 242 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 11 பேர் நேற்று குணமடைந்து, வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்த 16 ஆக அதிகரித்துள்ளது என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.