அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ள விடயம்..!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சி வழங்கியதை காணொளியாக பதிவுசெய்தமை தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப பொதுச் செயலாளரின் செயற்பாடு தொடர்பில் அந்த அமைப்பு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தமது அமைப்பில் இருந்து அவர் தற்காலிகமாக விலகியுள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மௌலவி மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கிய சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தல் விடுத்தருந்தார்.

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளருக்கு அவர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.