கடும் மன வருத்தத்தில் ஜனாதிபதி கோட்டாபய!

அரச, தனியார் துறைகளில் காணப்படுகின்ற மந்தகதியிலான செயற்பாடுகள் கவலைக்குரிய விடயமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் மக்கள் செறிந்து வாழ்கின்ற நகரங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள் ஒரே அளவில் இருப்பதை உதாரணமாக குறிப்பிடலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து நிர்மாணப் பணிகளையும் உடனடியாக நிறைவு செய்ய வேண்டுமெனவும், உளப்பாங்கு மாற்றத்துடன், அபிவிருத்தி புரட்சிக்கு தயாராக வேண்டுமென்று அனைத்து தரப்பினரையும்

'அனைத்து குடும்பங்களுக்கும் வசதியான வீடு' பெற்றுக்கொடுப்பது 'சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் எதிர்பார்ப்பாகும்.

வீடொன்றின் தேவை இருந்தாலும் அதனை தனியாக நிறைவு செய்துகொள்ள முடியாமை பெரும்பாலனவர்களுக்கு உள்ள பிரச்சினையாகும்.

வீட்டை கொள்வனவு செய்வதற்கு 6.25 வீத வருடாந்த வட்டி வீதத்தில் 30 வருட காலத்திற்குள் செலுத்தும் வகையில் அரச வங்கி மூலம் கடன் வழங்குவதற்கு பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய வகுப்பினரின் வருமானத்திற்கு ஏற்ற தொடர்மாடி வீடுகளை நிர்மாணிப்பதற்கு அவசியமான காணிகள் அமைச்சுக்கு இலவசமாக வழங்கப்படுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வட மாகாணத்தில் 22 நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற 409 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து மீண்டும் உடனடியாக அவர்களை குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.