மகாணசபை தேர்தல் தொடர்பாக மஹிந்த வெளியிட்டுள்ள புதிய தகவல்!

மகாணசபை தேர்தல் திகதியை தீர்மானிக்கும் சட்டரீதியான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

காலி நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாணசபை தேர்தல் நடாத்தப்படும் திகதி தொடர்பில் பலர் எம்மிடம் கேட்கின்றனர்.

மகாணசபை தேர்தல் திகதியை தீர்மானிக்கும் சட்டரீதியான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை. தற்போதைய நிலைமையின் பிரகாரம் நீதிமன்றமும் இது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தது.

நாடாளுமன்றம் ஊடாகவே தீர்மானம் எட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் சிலர் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.