ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு நேர்ந்த கதி..!

கைது செய்யப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்புடையவரான பொடி லெசி எனப்படும் ஜனித் மதுசங்க எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலானாய்வு திணைக்களம் தாக்கல் செய்த மனு காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனவல முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட தாரக மற்றும் பொடி லெசி ஆகியோர் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு பகிரங்கமாக உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கடந்த 8 ஆம் திகதி நீதிமன்றில் அறிக்கையிட்டது.

இதற்கமைய, சிறைச்சாலைக்கு சென்று பொடி லெசியிடம் வாக்குமூலம் பதிவு செய்யவும் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் அனுமதி கோரப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு அனுமதியளித்த நீதவான் எதிர்வரும் 25 ஆம் திகதி சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு உயிர் அச்சுறுத்தலை விடுத்தமை தொடர்பான வழக்கில 2 வது சந்தேகநபராக பொடி லெசியை பெயரிடுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.