இன்று மாலை கொரோனாவால் பலியானவரின் முழுமையான விபரங்கள்...!

இலங்கையில் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 60 வயதான ஆண் ஒருவரே கொவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

கடலோடியாக செயற்பட்ட அவர் கடந்த 2 ஆம் திகதி பஹ்ரேனில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

நாடு திரும்பும் வரை அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதற்கான அடையாளங்கள் காணப்படாத நிலையில் கடந்த 9 ஆம் திகதி சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய மரணத்திற்கான நெருங்கிய காரணம் மாரடைப்பு என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளைஇ நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 9 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3005 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட் 19 தொற்றுறுதியாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 216 ஆக குறைவடைந்துள்ளது.

நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 234 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.