வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு....!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் பல பாகங்களிலும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆய்வு பணிமனை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக மற்றும் பாதுக்கை ஆகிய பகுதிகளுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை, கேகாலை,இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையால் இன்று நண்பகல் 12 மணி வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என சிறிய மற்றும் நடுத்தர படகு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.