மாட்டிறைச்சி பிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி....!

உடனடியாக அமுல்ப்படுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினாவல் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில், இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும்.

பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்த வேண்டும்.

இதற்காக, உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால், இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்;களை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

மாட்டிறைச்சியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, 2019 ஆண்டு இறுதியில் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் பூர்த்தி செய்யப்படாத 7 இலட்சத்து 66 ஆயிரத்து 784 வழக்குகள் இருந்துள்ளதாக அமைச்சரவையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கு துரிதமான தீர்வை காண்பது அவசியமாகும்.

சட்டத்துறை நிபுணர்களின் பங்களிப்பை பெற்று மூன்று வருட காலத்திற்குள் நீதிமன்ற மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதி அமைச்சின்கீழ் விஷேட அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.