மீண்டும் இலங்கை இருளில் மூழ்கும் அபாயம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்சார கட்டமைப்பு தொடர்பில் முறையற்ற திட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே, மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சுஜீவ கே அபயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மின்கட்டமைப்பு தொடர்பில் உரிய திட்டங்கள் இருப்பின், கைகளினால் தவறுகள் ஏற்பட்டாலும் மின் தடை ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கவனஞ் செலுத்தப்படாத பட்சத்தில், நாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மின் தடையினையடுத்து, கனேடிய நிறுவனமொன்றின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆலோசனைகளை இலங்கை மின்சார சபை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை எனவும் மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சுஜீவ கே அபயவிக்ரம மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.