கண்டியில் இன்றும் நில அதிர்வு... அதிர்ச்சியில் பொது மக்கள்...

கண்டி - பல்லேகல பகுதியில் இன்று (02) சிறு நில அதிர்வு ஏற்பட்டது.

காலை 07.06 மணியளவில் இது பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது

மககனதரவ நில அதிர்வு நிலையத்தில் இது பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இந்த அதிர்வு ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

புவியியல் நிலநடுக்கத்திற்கான காரணத்தை கண்டறிய புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முன்னதாக, கண்டியின் சில பகுதிகளிலும், முக்கியமாக ஹாரகம மற்றும் திகனவிலும் ஞாயிற்றுக்கிழமை (30) ஒரு சிறிய நில அதிர்வு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.