முஹம்மட் ஹாசில்
ஹொரவ்பொத்தான, வீரச்சோலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று(29) பாடசாலையின் அதிபர் ஜனாப் எம்.பரீட் தலைமையில் மிக கோலாகலமாக நடைபெற்றது.
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் ஊடக குவைட் நாட்டு நிதியொதுக்கீட்டில் இந்த வகுப்பறை கட்டிடம் அமைக்கப்பட உள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதீதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்
கலந்துகொண்டதோடு விசேட அதிதியாக அல் ஹிமா சமூக சேவை அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ. நூறுல்லாஹ்(நளீமி) மற்றும் கௌரவ அதிதியாக ஒய்வு பெற்ற முன்னாள் கெபிதிகொள்ளாவ வலயக்கல்விப் பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.எச். அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இவர்களோடு ஹொரவ்பொத்தான பிரதேச சபை உறுப்பினர்களான என்.எம் பாஸில், கெ. எஸ்.எம் றிஸ்வான், சமூக சேவையாளர்களான ஏ. ஆர். எம் தாரிக் ஹாஜியார், ஏ.ஏ.எம். சியாம் ஹாஜியார், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment