தப்லிக் ஜமாத்தினர் மீது, ஞானசாரர் தேரர் கடும் விமர்சனம்...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெரும்பாலானோர் தப்லிகி சிந்தாந்தவாதிகள் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த ஞானசார தேரர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜாவிட் யூசுப்பின் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளித்தார்.

இதன்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிர்வாகத்தின் 50 வீதமானோர் சவூதி வஹாபிசத்தின் கீழ் வரும் தப்லிகி சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி விருந்தகத்தில் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் ஒரு தப்லிகி சித்தாந்தவாதி என்று ஞானசாரர் தெரிவித்தார்.

இந்த சித்தாந்தம் காரணமாகவே சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் இடைவெளி தோற்றுவித்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹலால் தயாரிப்புகளை உட்கொள்வது முஸ்லிம்களின் உரிமை என்பதால் தனக்கு ஹலால் தயாரிப்புகள் தொடர்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

எனினும் பல் தூரிகைகள் போன்ற பொருட்களுக்கு கூட ஹலால் சான்றிதழைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் உணரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையின் எஸ்.எல்.எஸ் முத்திரை இருப்பதால் ஹலால் சான்றிதழ் அவசியமில்லை என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.