நாட்டு மக்களிடம் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

தனிப்பட்ட விழாக்களுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என ஜனாதிபதி ஊடக பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அன்றாட உத்தியோகபூர்வ பணிகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக நேரத்தை செலவிடுவதற்கு மேலதிகமாக விழாக்கள், பரிசு வழங்கும் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு எதிர்பார்க்கவில்லை என்பதால் அத்தகைய நிகழ்வுகளுக்காக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாமென அனைவரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மீதுள்ள அன்பு மற்றும் மதிப்பின் காரணமாக அதிகளவானோர் தமது வாழ்வின் முக்கிய சந்தர்ப்பங்களில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

மக்கள் தன்மீது வைத்துள்ள இந்த பற்றை ஜனாதிபதி பெரிதும் மதிக்கின்றார்.

எனினும் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு புறம்பாக தமக்கு கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதற்கு ஜனாதிபதி; உறுதி கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான கையூட்டலும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்குவதற்காக இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.