சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு ஓர் நற்செய்தி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சவுதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கையர்களுக்கு சில சலுகைகளை வழங்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தொற்றுக் காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற முடியாதுள்ள இலங்கையர்களின் நுழைவு அனுமதி காலாவதியாகி இருப்பினும் தற்போது அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக வெளியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எந்தவிதமான அபராதம் அல்லது கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இலங்கை பணியாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சவுதி அரேபியா, இது தற்காலிக விசேட சலுகை என தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தற்போது சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி வரும் இலங்கை பணியாளர்களுக்கு அரசாங்கம் குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சிறந்த முறையில் இருப்பதனால் இந்த நடவடிக்கைகள் சாத்தியமாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவினால் இலங்கை பணியாளர்களுக்கு வழங்கிய சலுகைகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகிய செயற்பாட்டுக்கு இலங்கை தனது நன்றி வெளிப்படுத்தியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.