கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் மீண்டும் கொரோனா... நேற்று மாத்திரம் 9 பேர் அடையாளம்...

நாட்டில் நேற்றைய தினம் 17 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியானது.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாம் கைதிகள் 9 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய 6 பேருக்கும், குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய 2 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 140 ஆக உயர்வடைந்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 193 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 9 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.