கண்டியில் 5 மாடிக்கட்டிடம் இடிந்து விழுவதற்கு இதுவே காரணம்..!

கண்டியில் நேற்று ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்தமையினால் 3 பேர் உயிரிழந்ததுடன் பெரும் பாதிப்பும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பள்ளத்தாக்கின் தொடக்க பகுதியில் இந்த கட்டடம் கட்டப்பட்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

பள்ளத்தாக்கு பகுதியில் தளர்வான மண் அடுக்குகளின் மீது ஐந்து மாடி வீடு கட்டப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் கண்டி மாவட்ட புவியியலாளர் சமந்த போகஹபிட்டிய தெரிவித்துள்ளனர்.

அதன் பாரத்தை தாங்க முடியாமல் கட்டிடம் தாழிறங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமையின் கீழ் அந்த இடத்திற்கு அருகில் உள்ள 4 வீடுகளில் உள்ளவர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அந்த கட்டிடம் தாழிறங்குவதற்கு நில அதிர்வு காரணம் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கண்டி, பூவெலிகட பிரதேசத்தில் நேற்று தாழிறங்கிய கட்டிடம் ஒன்றில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் சமில் பிரசாத் என்ற வர்த்தகரும் அவரின் சட்டத்தரணியான மனைவியும் ஒன்றரை மாத குழந்தையுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.