தாழிறங்கிய 5 மாடி கட்டிடத்திற்குள் சிக்கியுள்ள தம்பதிகள்- தேடும் பணிகள் தீவிரம்

கண்டி - பூவெளிக்கடை பகுதியில் மாடிக்கட்டிடம் ஒன்று தாழிறிங்கிய அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.

இன்று அதிகாலை குறித்த 5 மாடிக்கட்டிடம் தாழிறிங்கிய நிலையில், அதன் அருகில் உள்ள வீடொன்றின் மீது விழ்ந்து அனர்த்ததிற்குள்ளானதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தத்தில் 5 பேர் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் இதுவரை 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் மேலும் 2 பேரை காணவில்லை என்பதுடன் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு தம்பதியினரே இவ்வாறு கட்டிடம் தாழிறங்கியதில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த பகுதியை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் வருவதனை தவிர்த்துக் கொள்ளமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.