20ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரிடம் கிடைத்த முக்கிய அறிக்கை..

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இன்று (15) கையளித்துள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவில் அமைச்சரவை அமைச்சர்களான உதய கம்மன்பில, அலி சப்ரி, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிரேமநாத் சி. தொலவத்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.