20 ஆவது திருத்த வரைபு; மொத்தமாக 39 மனுக்கள் தாக்கல்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி மேலும் 19 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்றைய தினம் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக 21 மனுக்கள் உயர் நீதிமன்றல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த வரைபானது பாராளுமன்றல் சமர்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தமாக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசனம் மற்றும் அதன் துணைத் தலைவர் ருவான் விஜயவர்தன, தேர்தல் ஆணையகத்தின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க உள்ளிட்டோரும் இன்றைய தினம் மனுத்தாக்கல் செய்தவர்களுள் அடங்குவர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய மற்றும் நீதிபதிகளான புவனேகா அலுவிஹரே, சிசிரா டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன மற்றும் விஜித் மலல்கோட ஆகிய ஐந்து உயர் நீதிமன்ற நீதியர்கள் முன்னிலையில் நாளை இடம்பெறவுள்ளது.

மனுதாரர்கள் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் பல பிரிவுகளின் அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்துவதாகவும், மேலும் 20 ஆவது திருத்த வரைவினை மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.