இலங்கையில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவானது!

பஹ்ரெய்னிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு வந்த ஒருவர் இன்று (14) சிலாபம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுகேகொடையைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம்திகதி நாடு திரும்பிய போது தொற்றாளராக அடையாளம் காணப்படாத இந்நபர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 9 ஆம்திகதி அவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவந்த அவர் இன்று உயிரிழந்துள்ளார். இவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.