நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,374 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 3,230 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று நோயாளர்களில் 131 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 46 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் 33,833,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,012,014 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதேவேளை 25,139,541 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
Post a Comment