SPB உடல் நிலை தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் இறுதியாக வெளியிட்ட அறிக்கை

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5ஆம் திகதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் கடந்த 13 ஆம் திகதி அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எக்மோ கருவி மூலமாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல் நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து தினமும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவர்களுடன் ஆலோசித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.