பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை : மருத்துவமனை நிர்வாகம் அவசர அறிக்கை!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலமாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலமாகவும் தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்குழு அவருக்குச் சிகிச்சை அளித்து வருவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.பி. உடல் நலம் பெற திரை உலகினர், இரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இணைந்து கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.