சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளிப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் மூன்று முஸ்லிம்களதும் ஒரு தமிழரதும் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், சட்டத்தரணி சாகர காரியவசம், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் மஞ்சுளா திஸாநாயக்க, சிரேஷ்ட பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித ஹேரத்.
சமூக செயற்பாட்டாளர் கெவிந்து குமாரதுங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில்
பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பொறியியலாளர் யதாமனி குணவர்தன, வட மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வர்த்தகர் டிரான் அலஸ், மேல்மாகாண முன்னாள் ஆளுநர் சீதா அரம்பே பொல, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, வர்த்தகர் மொஹமட் பழீல் மர்ஜான் ஆகியோர்களாவர்.
Post a Comment