இரண்டு அலி சப்ரிகளால் நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள குழப்பம்

ஒரே பெயரில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் நாடாளுமன்றத்தில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி நாடாளுமன்ற தெரிவு குழுவில் நியமிக்கப்பட வேண்டும் என்ற கடிதம் அலி சப்ரிக்கு ஒப்படைக்கப்படவிருந்தது.

எனினும், அந்த கடிதம் நாடாளுமன்ற அதிகாரிகளிடையே ஏற்பட்ட குழப்பம் காரணமாக புத்தளம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சகத்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கர் சபாநாயகரிடம் விசாரித்தபோது, ​​ஒரே மாதிரியான இரண்டு பெயர்கள் இருப்பதால் தான் குழப்பம் ஏற்பட்டது என்று கூறினார்.

இதற்கிடையில், நியமிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அந்த பகுதியில் தனது மக்களுக்கு சேவை செய்ய வேண்டியிருப்பதால் நாடாளுமன்ற தெரிவு குழுவில் இருந்து இராஜினாமா செய்ய நடவடிக்கை எடுப்பதாக இறுதியாகக் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.