முன்னாள் பரீட்சை ஆணையாளர் மஹிந்த விஜேசிறி காருக்குள் இருந்து சடலமாக மீட்பு!

முன்னாள் பரீட்சை ஆணையாளர் மஹிந்த விஜேசிறி தனது காருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை கெஸ்பேவ வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் இருந்தே இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹதுடுவையை வசிப்பிடமாகக் கொண்ட 76 வயதான மஹிந்த விஜேசிறி, மகள் வீட்டிலுள்ள தனது மனைவியை அழைத்துவருவதற்காக நுகெகொடைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோதே திடீர் சுகயீனம் காரணமாக காருக்குள் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணை களிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2000 முதல் 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மஹிந்த விஜேசிறி பரீட்சை ஆணையாளராக கடமையாற்றியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.