நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஓமானில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 5 பேரும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 6 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ள 213 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.