கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடும் நிலாவின் உடல் நிலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகின்றது.

முக்கியமாக தமிழகத்தில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பாடும் நிலா என அறியப்படும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது கொரோனா தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகளே அவரிடம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்ததுடன் இவரை வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறும் தெரிவித்தனர்.

இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் மருத்தவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதே மேலானது என மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

கடந்த இரண்டு வார காலமாக சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதாக அந்த நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தற்போது உயிர்காக்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.