பயணிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு - சற்று முன்னர் தீர்மானம்

பயணிகள் நன்மை கருதி புகையிரத திணைக்களம் மேற்கொண்டுள்ள தீர்மானம்.

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வார இறுதி நாட்களுக்கான புகையிரத சேவைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை 05.10 இற்கு கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வழியாக காங்கேசன்துறைக்கும், பிற்பகல் 01.05 இற்கு காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு கோட்டை வழியாக கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திற்குமான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை புகையிரத நிலையம் வரை காலை 6.45 இற்கு பயணிக்கும் புகையிர சேவை மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளதோடு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி முற்பகலல் 8 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரத சேவையும் வழமைக்கு திரும்பவுள்ளதாக புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் பொது போக்குவரத்துக்களை கட்டம் கட்டமாக இடைநிறுத்தியதோடு தற்போது பொது போக்குவரத்து துறையின் சேவைகளை கட்டம் கட்டமாக மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2971 ஆக காணப்படுகின்ற நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக பதிவாகியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.