எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தற்போதைய நிலைமை குறித்து வெளியான புதிய செய்தி

கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க (கோமா) நிலையிலிருந்து மீண்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நேற்றுமுன்தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

அதன்பின்னர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மயக்கநிலையில் இருக்கும் அவருக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மயக்கநிலையில் இருந்த எஸ்.பி.பி. தற்போது மயக்கநிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும், அவர் அவ்வப்போது கண்விழிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நுரையீரல் தொற்று காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.