நீரில் மூழ்கிய கண்டி நகரம்

இன்று அதிகாலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக கண்டி நகரத்தில் சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இலங்கை வங்கி கட்டடம், வாகனம் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்கள் உட்பட பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கியதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் உட்பட வர்த்தக நிலையங்கள் மூன்று அடி வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.

இதற்கு முன்னர் கடுமையான மழை பெய்த சந்தர்ப்பங்களில் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நகர சபை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த போதிலும் தீர்வு கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.