தேசிய பட்டியலில் நியமிக்கப்படவுள்ள ரணில்?

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பெயரிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்தவொரு உறுப்பினரும் வெற்றி பெறவில்லை. எனினும் பெற்றுக்கொண்ட வாக்கின் அடிப்படையில் ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பதவிக்காக கட்சிக்குள் உள்ளக மோதல் ஏற்படுவதனை தடுப்பதற்காக கட்சியின் தலைவருக்கு அந்த பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பொதுத் தேர்தலில் ஏற்பட்டுள்ள பாரிய தோல்விக்கான காரணத்தை கண்டறிவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் 5 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, சஜித் தலைமையிலான பெருமளவு உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர். இதன் காரணமாக சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கட்சியின் கீழ் அவர்கள் தோ்தலில் போட்டியிட்டு, 55 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.