இன்றைய பாராளுமன்ற கன்னி, அமர்வில் நடக்கவுள்ள சில சுவாரசியங்கள்

இலங்கையின் 9வது நாடாளுமன்றம் சற்று நேரத்தில் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தமக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான நபர்களை தெரிவு செய்து அறிவிக்கவில்லை.

9வது நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள இந்த 223 பேரில் 77 பேர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்களில் 63 பேர் தேர்தலில் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 14 பேர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் 60 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 49 பேர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 11 பேர் தேசிய பட்டியல் ஊடாக தெரிவாகியுள்ளனர்.

ஏனைய கட்சிகள் ஊடாக 17 பேர் புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 14 பேர் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் தேசிய பட்டியல் ஊடாக செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை மட்டக்கப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர ஆகியோர் சிறைச்சாலையில் இருந்து வந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக சிறைச்சாலையில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.