நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கும் மின்சக்தி அமைச்சர்... ஏன் தெரியுமா....?

கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின்சார தடை காரணமாக சிரமத்துக்குள்ளான பொத மக்களிடம் மன்னிப்ர் கோருவதாக மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன்,நாளை மறுதினம் முதல் நாடு தழுவிய மின்சாரத் தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதி கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டது.

அதனை சீரமைப்பதற்காக கடந்த 18 ஆம் திகதி முதல் நாளாந்தம் மாலை 6 மணி முதல் 10 மணி வரையில் நாடு முழுவதும் ஒரு மணித்தியாலத்திற்கு கட்டம் கட்டமாக மின்சாரத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

நாடாளாவிய ரீதியில் 4 வலயங்களாக பிரிக்கப்பட்டு இவ்வாறு மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் அந்த நடவடிக்கை இடம்பெறாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.