உயிரை மாய்க்க பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த யுவதி.. காப்பாற்ற குதித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி மாயம். யுவதி உயிர் பிழைப்பு.

பண்டாரகமை - பாணந்துறை வீதியிலுள்ள பொல்கொட பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த யுவதியை

காப்பாற்றும் நோக்கில் ஆற்றில் குதித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் ஆற்றில் குதித்த யுவதியை பிரதேசவாசிகள் காப்பாற்றி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பண்டாரகமை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான இளைஞனே யுவதியை காப்பாற்றும் நோக்கில் ஆற்றில் குதித்து காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணயளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் பொலிஸ் சுழியோடிகள் காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போன நபர் பந்தரகம பகுதியில் உள்ள வெள்ளந்துடுவ கெமுனு மவத்தாவில் வசிக்கும் 29 வயது குடும்பஸ்தர் என்று போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலைக்கு முயன்ற யுவதி பொல்கொட பாலம் அருகே வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்யப் போவதாகக் கூறி தனது உறவினருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து விட்டு ஆற்றில் குதித்துள்ளார்.

யுவதி ஆற்றில் குதிப்பதைப் பார்த்த இளைஞன் அவளைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளார்.

குறுப்பிட்ட யுவதி , சில காலம் முன் காதல் கொண்டிருந்த இளைஞனிடமிருந்து பிரிந்துள்ளார்.

இதனால், அந்த இளைஞன், யுவதியின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனால் யுவதி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.