பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்றது அரசியலமைப்புக்கு முரணான விடயம்; வெடித்தது புதிய சர்ச்சை

நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னர் பிரதமரும் அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர் என ஐக்கிய சோசலிச கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்திய்பபிரமாணம் செய்துகொள்ளாத பிரதமரும் அமைச்சர்களும் நாட்டில் உள்ளனர் என கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பதவிவகிக்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் பலப்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் இதன் மூலம் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முயல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை நாட்டுக்கு ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.