இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள தகவல்

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு பூராகவும் தடைப்பட்ட மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, குருணாகல் மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு 8 மணியளவில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பிருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்று மதியம் 12.35 அளவில் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு பூராகவும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

இதன் காரணமாக வீதி சமிக்ஞைகள் செயற்படாத நிலையில், கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அத்துடன் மின்சார தடை காரணமாக தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு பூராகவும் மின்சார விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று முற்பகல் மின்சக்தியமைச்சில் ஒன்று கூடவுள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் டளஸ் அலகப்பெருமவின் ஆலோசனைக்கமைய இந்த குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் தலைவராக பேராசரியர் ராஹ_ல அதலகே செயற்படவுள்ளார்.

இந்த குழுவின் அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சிடம் கையளிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இந்தநிலைமை தொடர்பாக 3 தினங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இலங்கை மின்சார சபையிடம், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.