உலகையே கதிகலங்கச் செய்த லெபனான் குண்டு வெடிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுக பகுதியில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 70 பேர் பலியாகியுள்ளதுடன் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக துறைமுகத்தில் இருந்து நூறு அடி தொலைவில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும், வெடிப்பை அடுத்து நகரத்தில் கரும் புகை வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த வெடிப்பு சம்பவம் பெய்ரூட்டில் மாத்திரம் அன்றி அந்த நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் உணரப்பட்டுள்ளது.

பெய்ரூட் துறைமுக சேமிப்பு கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டொன் அமோனியம் நைட்ரேட் இரசாயனமே இந்த பேரழிவுக்கு காரணம் என லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் அமோனியம் நைட்ரேட் இரசாயனம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே இந்த பாரிய அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

தலைநகர் பெய்ரூட் முழுவதும் மிகப்பெரிய நில அதிர்வை உள்ளது. எப்படி வெடித்தது என்பதற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை.

இந்த வெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக லெபனானின் சுகாதார அமைச்சர் ஹமாத் ஹசன் தெரிவித்துள்ளார்.

ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதால் நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் ஆம்புனன்சுகள் அவசரமாக வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமைனைக்கு கொண்டு சென்றன.

துறைமுகப் பகுதியைச் சுற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க உலங்கு வானூர்தி, தீயணைப்பு வாகனங்கள் ஆகியன கடுமையான போராட்டத்தை மேற்கொண்டிருந்தன.

அந்நாட்டின் துறைமுகப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Ammonium Nitrate என்ற வெடிமருந்து பொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து, 234 கி..மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு எதிரொலியாக நாளை தேசிய துக்க நாளாக கடைபிடிக்கப்படும் லெபனான் பிரதமர் Hasan Diab அறிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.