நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும், பிரித்தானியா மற்றும் லெபனானில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 995 ஆக உயர்வடைந்துள்ளதுடன், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.